முதுகலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை விளம்பர திமுக அரசு ரத்து செய்துள்ளதால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


எம்.டி., எம்.எஸ்., ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு, 2024-25ம் கல்வியாண்டில் 9 துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மருத்துவம், மயக்கவியல், மார்பக மருத்துவம், கதிரியக்கவியல், சமூக மருத்துவம், தடயவியல் மருத்துவம் ஆகிய துறைகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளுக்கான இடங்களில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டு இடங்கள் தற்காலிகமாக ஒராண்டுக்கு மட்டும் நிறுத்தி வைக்கப்படும் என்றும், மேலும் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கு ஏற்றது போல் முடிவெடுக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day